என்னவளதிகாரம்--தேன்மலர்கொடியடி நீ

வண்ணமலரின் முகம்
கொண்ட பெண்ணே
உன்முக பருக்களென்ன
காலை பனித்துளி யோ...?
உன் அழகில் முகப்பரு
மேன்மேலும்
அழகுதானடி
எனக்கு...!
கூரிய முள்விழிகளை
பாதுகாப்பு அரணாய்
கொண்ட
உன் இதயமென்ன
ரோஜாமல ரோ...?
என் இதயத்தை கிழித்த
உன் முதல்பார்வையில்
அறிந்தேனடி
நான்...!
ஆளைமயக்கும் மணம்
வீசும் மலர்கள் பூத்து
குலுங்கும் அடர்ந்த
உன் குழலென்ன
மல்லிக்கொடி யோ...?
தினந்தினம் மலர்கள்
பூத்து குலுங்குகின்றதை
கண்டேனடி
நான்...!
வண்டுகள் மொய்கின்ற
உன்னுதட்டு சாயமென்ன
தேன்துளி யோ...?
உந்தன் தேன் சுவைக்க
சிறு ஆசையடி
எனக்கு...!
...என்னவளதிகாரம்...
இவன்
பிரகாஷ்