என் வெண்மதியே
நான் ஒன்றும் புத்தன் கிடையாது உத்தமனாக வாழ
எப்பொழுது உன் பிம்பம் என் மனக்கண்ணில் பதிந்து விட்டதோ
அப்பொழுதே பித்தனாகிப் போனேன்
உன் மீதிருந்த அளவற்ற பற்றுதலும்
நிலையற்ற பல தொற்று நோய்களை தந்தடி
எந்தன் விதியை மதியால் வெல்ல முடியும்
என நானறிந்தேன்
உன்
மதி முகத்தை கண்ட பிறகு
மதி இன்று முழு நிலவாய்
வானில் தான் தவழ்கிறதே
உன் மதி முகத்தை காணாமல்
என் இதயமும் தான் ஏங்குகிறதே
மதியைக் கண்டதும் உன் திருவுருவம்
என் மனக்கண்ணில் வந்து செல்கிறதே
காரணம் தான் அறிவாயா என் கண் மணியே
ரணம்பட்ட என் இதயத்தை குணமாக்கும்
சஞ்சீவினி மூலிகை நீ
குணப்படுத்த வாராயோ வெண்மதியே.