மின்மினியே
தென்றல் வீச ஏங்கும் இளமை
தேவி நீயோ அழகு பதுமை
காந்த கண்களிலே
ஏந்தும் புன்னகையே
சுகம் சுகம்....
நீள்வட்டமாய் விழியில் நிலவு
யார் வைத்தது நடுவில் பொட்டு
சோடி கிளி நாமே
கூடி குலவ
தேடி வா எனை....
உன் வீட்டில் மின் வெட்டென்று - நீ
என்றேனும் சொன்னாயோடி
மின்மினி பூச்சிகள் கூட்டம் கூடி - தரும்
மின்னொளி உந்தன் வீட்டில் ஓடி
மின்மினியே அவள் தேகம் தீண்டாதே - உயர்
மின்னழுத்தம் உன் தேகம் தாங்காதே
மின்மினி போலேதான் நானும்
உன் வாழ்வில் ஒளி வீச
என் வாழ்வை தருவேன்
நீ கொஞ்சம் இறங்கி வா வா
உதட்டோரம் ஒளியும் சிரிப்பு - அதை
உணவாக உண்டேனடி
பசி தூக்கம் மறந்தேனடி - ஒரு
பைத்தியமாக ஆனேனடி
எண்ணத்தின் வேகம் தான்
எல்லை மீறும் நேரத்தில்
எங்கே நீ போனாலும்
உனைச்சேர்வேன் நொடிப்பொழுதில்
உந்தன் கருங்கூந்தல் கண்டு
கார்மேகம் என்று
மயில்போல் மனதில் தோகை விரித்தேன்