வாழ்வியற் குறட்டாழிசை 15 வாய்மை

வாழ்வியற் குறட்டாழிசை 15
வாய்மை.
பார்த்ததை, கேட்டதை அப்படியே கூறும்
வார்த்தை வாய்மை ஆகிறது.
வாய்மை பேசுவோன் மிகச் சிறந்த
தூய்மையாளன் பெயரைப் பெறுகிறான்.
உண்மையொளி உள்ளத்தில் பிறந்தால் ஒருவன்
பண்ணும் செயலிலுமது பிரதிபலிக்கும்.
உள்ளத்தில் தூய்மை, பேச்சில் வாய்மை
கள்ளமற்ற வாழ்வுப் பாதையாகும்.
வாய்மை பேசினால் என்றும் நன்மை
வாய்த்தல் என்பது வாய்மையல்ல.
வாய்மை பேசாதவன் மனச்சாட்சி அவனை
ஓய்ந்து அமைதியடைய விடாது.
அரிச்சந்திரனியல் எல்லோரிடமும் வாய்ப்பது என்பது
அரிதான ஒரு செயல்.
வாய்மையாளனை வாயார வாழ்த்தாத பலர்
வாழும் உலகம் இது.
வாய்மை தேய்மையற்ற முதன்மை வழி.
சாய்மையின்றி நேர் வழியேகலாம்.
வாய்மையால் உலகாள முடியாது என்று
பொய்மையாளர் நிரூபிக்கிறார் இன்று.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-10-2011.