விந்தை புரிந்தாய்

சுவைகாணும் செவிசெய்து இசையுறையும் நாவளித்து
கவிவரையும் கைகொடுத்து அறிவறத்தை எடுத்தோதி
அகமதனில் வந்தமரும் விந்தைகளைப் புரிந்தெந்தாய்!
நின்புகழை யான்கூறி நாள்தோறும் வாழ்த்திடவே
பல்மொழியின் பலசொற்கள் பயின்றாலும் அம்மாவே - அதனொலியில்
உனைப்போலே உயிரில்லை உணர்வில்லை அழகில்லை - அதனாலே
அன்பமுதே இன்தமிழே என்னுயிரே உன்திருவை
உனைகொண்டே வாழ்த்துவனே! வாழ்த்துவனே!

எழுதியவர் : sureshkumar (25-Dec-15, 10:21 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 457

மேலே