நாளைய விடியலில் புரட்சி 555

விவசாயி...

நான் மாடு பிடித்து சென்ற வயல்வெளி
இன்று விளையாட்டு மைதானம்...

புற்களை சுமந்த வாய்க்கால்கள்
இன்று கிருமி நாசிகளை சுமக்கிறது...

ஆனைகட்டி போரடித்தார்கள்
முன்னோர்கள்...

காளைக்கட்டி போரடித்தார்கள்
தாத்தாக்கள்...

பசுமையான வயல்வெளி
எங்கே தேடலில் நாம்...

உற்சாகமே விவசாயின் சொத்து
இன்று சோகமே அவனின் சொத்து...

மூன்று போகம்
விளைந்ததாம் அன்று...

வறண்ட வயல்கண்டு
தற்கொலை நடக்கிறது இன்று...

நாற்றங்காலில் உணவை
தேடியது பறவைகளின் இனம்...

உணவின்றி மடிகிறது
பறவைகளின் இனம் இன்று...

பருப்பின்விலை உயர்ந்துவிட்டதாம்
மின்தூக்கி வைத்து மாடிவீடு கட்டியதால்...

விவசாயத்தில் தோற்றதால்
செத்துக்கொண்டு இருக்கிறான் விவசாயி...

கல்வைத்து கொடிபிடித்தவன்
கப்பலில் செல்கிறான்...

மலர்கள் மலர்வதை
நிறுத்திகொண்டது...

மலர்ந்துகொண்டு இருக்கிறது
அணு ஒப்பந்தங்கள்...

மத்தியிலும் மாநிலத்திலும்
மாறிக்கொண்டு இருக்கிறது ஆட்சிகள்...

செத்துக்கொண்டு இருக்கிறது
மனசாட்சிகள்...

எழுமா விவசாய புரட்சி
நாளைய விடியலில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Dec-15, 8:19 pm)
பார்வை : 148

மேலே