ஊடல்

* நான்செய்த
தவறென்ன...?

உன்னை நினைத்து
என்னைத் தொலைப்பதும் ;
என்னைத் தேடியே
உன்னில் காண்பதும்

ஜனனம்தான் - இனிக்கும்
மரணம்தான் ...!

* மெழுகு உருகினால்
வெளிச்சம் " காதல் "
உருகும் ஒரு துளியில்
விலகும் இருள் ;

அழகே ...
அறிவாயோ...!

நான் செய்த
தவறென்ன...?

* இங்கே
எனை மிரட்டும்
இளந்தென்றலை ;

பயமுறுத்தும்
பனித்துளியை ;

கவியாக்கியவன்
கலங்குகிறேன் ,
கெஞ்சுகிறேன் ...

சொல்வீர்களா தூது...?

* அன்பே - அன்று
உன் விரல் தரும்
வருடல் எண்ணி;

பலமுறை அறைந்தேனே
சிலுவையில் என்னை ...!

* இன்று
நெஞ்சுக் கூடுகளில்
நெருப்புச் சித்திரமாய்
சி(எ)ரிக்கிறாய் ஏனோ...?

* அதோ...

கல்லறைப் பூக்களும்
மகரந்தச் சேர்க்கையில்
மணம் புரிகின்றன
கவனி...!


நான் செய்த
தவறென்ன ...?

* கடலில் தவழும்
நிலவைப் போல - என்றும்
நெஞ்சில் நீயடி ;

புல்லாங்குழலில்
தழும்பின் இசையாய் - வழியும்
வலியும் நீயடி ...!

* அன்றொரு நாள்
அந்தி வேளையில்
மழைநேரச் சாலையில் - உன்
இதழில்

அனுமதி பெறாமல்
எழுதிய
ஒற்றை முத்தம்

பெருங்குற்றமா ...?

* " மயக்கத்தில்
சொல்லித் தெரிவதில்லை
முத்தம் ;

மொத்தத்தில்
சொல்லி வருவதில்லை
யுத்தம்...! "

* ஒ.. மனமே...!

புரிவோம்
இருவரும் ...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (28-Dec-15, 4:32 pm)
Tanglish : oodal
பார்வை : 93

மேலே