காதல் தோல்வி-1

பிள்ளைப்பேறு தவம் வேண்டி
பெற்றெடுத்து கையிலேந்தி
என் மகள் எலிசபெத் என்று
கூறி நாமம் ஒன்று எனக்கு சூட்டி
தரணியிலே வருகையிலே
பருவ மங்கை ஆனபோது
இல்லற படுக்கை துறந்தவர்,
நித்தம் எந்தன் மகிழ்ச்சியிலே
திகைத்து நின்ற தந்தையவர்
தியாகம் அறியாதவளாய்
அவர்தம் பாசமொன்றை
போற்றாதவளாய்
உந்தன் மோகத்தோடு
கட்டுண்டவள் எங்கே
இங்கு காதலின்
புனிதம் அறிவாளென
காதல் தந்த சாபமோ-இந்த
காதல் தோல்வி வேண்டுமோ !.......

****************தஞ்சை குணா****************

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Dec-15, 10:26 am)
பார்வை : 365

மேலே