புத்தாண்டு குறும்பாக்கள்

புத்தாண்டு குறும்பாக்கள்
==========================ருத்ரா

கி மு வுக்குப் பிறகு காலண்டர்
கிழிக்காமல் விட்டிருந்தால்
சிலுவையும் முட்கிரீடமும்
ரத்தம் வழியாதே!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________

கடிகார நடுநிசி முள்ளில்
காதலிக்கு
ஒரு ரோஜா!
______________________________

சென்னைப் பிரளயம்.

நோவா கப்பல் கட்டப்பட்டது
செல்ஃபோன் மிடைந்து
இளைஞர் படையால்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________

2016 காலண்டர்
2015ன் முதுகில் ஆணியடித்து
மாட்டப்பட்டது.
_____________________________

20...16

புள்ளிகளில் "பீப்"
ஈடன் தோட்டத்து
பாம்புகளும் சைத்தான்களும்.
______________________________

2015 சுவடுகள்

எல்லாம் அந்த‌
செம்பரம்பாக்கம் ஏரியில்
மூழ்கிக்கிடக்கின்றன.
_____________________________

தூக்கிய ஒரு கை

வெள்ளத்தில் எல்லாம் மூழ்கியது.
தூக்கிய ஒரு கையில் தெரிந்தது
மின்னணு வாக்குப்பொறி.

__________________________________

எழுதியவர் : ருத்ரா (1-Jan-16, 4:12 pm)
பார்வை : 44

மேலே