இனியவன் சென்ரியூ 04
வருமானவரி விலகல்
பாவ விமோசன விலகல்
காணிக்கை உண்டியல்
^^^
பாதையை தடை செய்யாதீர்
கூக்குரல் இட்ட பயணி
பஸ்ஸின் கூரை மேல்
^^^
சாகசங்கள் செய்து காட்டுவோம்
சன கூட்ட நெரிசலுக்குள்
மோட்டார் சைக்கிள் வீரர்கள்
^^^
நன்றி மறந்தவன்
தமிழன்
தாங்க்ஸ் சொல்லுகிறான்
^^^
குழந்தையும் உச்சரிக்காது
முதுமையும் உச்சரிக்காது
புஷ்பம்
^^^
கவிப்புயல் இனியவன்
சென்ரியூ