தவளை

கண்ணும் கண்ணும் கலந்தவளை
=காதல் தேனில் நனைத்தவளை
எண்ணம் முழுதும் நிறைந்தவளை
=ஏக்கம் கொண்டு வாழ்ந்தவளை
வண்ண நிலவாய் ஒளிர்ந்தவளை
=வாடைக் காற்றாய் தவழ்ந்தவளை
மண்ணின் மலராய் திகழ்ந்தவளை
=மனைவி யாகத் தவித்தவளை
கன்னித் தமிழ்போல் இனித்தவளை
== கட்டுக் கரும்பாய் சுவைத்தவளை
மின்னல் இடையை சுமந்தவளை
==மேக மெனவே பொழிந்தவளை
பின்னிப் பிணைய இருந்தவளை
==பேதம் காட்டி மறுத்தவளை
பொன்னும் பொருளும் இல்லையென
==பிரிந்த நீகிணற் றுத்தவளை !
*மெய்யன் நடராஜ்