புரியாத புதிர் உருவங்களிலும், ஒரு வேளை உண்மை மனிதர்கள்
சுயநலம் சுடும்
சூழ்நிலைக்கைதிகள்..
வாழைத்தோல் வீசி விட்டு
வழுக்கி விழுவது யாரென பார்ப்பவர்கள்...
பிள்ளையையும் கிள்ளி விட்டு
தொட்டிலையும் ஆட்டுபவர்கள்...
இன்னும்
சலனத்துடனும் சிலர்,
சுற்று முற்றும் பார்த்தபடி..
சபலத்துடனும் சிலர்
சமயத்திற்கு காத்திருந்தபடி...
காழ்ப்புணர்ச்சியுடன்
காத்திருக்கும் சிலர்...
காதல் உணர்ச்சியுடனும்
பல சிலர்...
கடற்கரையில் தான்
இத்தனை சிலைகள்..
உஷ்ணமும் உப்பும்
எப்போது போகும்..?
உண்மையும் ஒழுங்கும்
என்று வந்து சேரும்...?
ஏ மனமே,
சொல்...?