தடை போடுங்கள்
தீ மூட்டி சமைப்பதால் காய் கனிகள் வேகும்
ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லை சமையலுக்கு
தடை போடுங்கள்!
அரைப்பதால் தானியங்கள் கதறும்
அரவை இயந்திரங்களுக்கு தடை போடுங்கள்
நடப்பதால் தரைக்கு நோகும்
நடப்பதற்கு தடை போடுங்கள்
உடை உடுப்பதால் பருத்தி
பட்டு பூச்சி சாகலாம் உடைக்கு தடை போடுங்கள்
மரம் ஏறி கனி பறிப்பதால்
மரத்திற்கு வலிக்குமே
மரம் ஏற தடை போடுங்கள்
ஆம் ஏறு தழுவது மிருக வதையாமே
அதற்கும் தடை போடுங்கள் ( போட்டசோ )
ஐயோ அணு கதிர்வீச்சில் உயிர்
இறக்கிறதே அனுவிற்கு தடை போடுங்கள்
முடியாது பிறப்பதால் தானே இறப்பு
வருகிறது பிறப்புக்கு வேண்டுமானால்
தடை போடலாம்