விடியல் பரிதி

விடியல் பரிதி
=====================================ருத்ரா

விசும்பின் துளிபெய்து வியன் நிலம் கீறி
மெய் வருத்தம் உரம் சேர்த்து
கனலும் கதிரொடு தன் புனல் இழைத்து.
காய்நெல் அறுத்து கழனி வளம் ஆக்கி
ஊஞ்சல் ஞாலம் தன் உயிரீந்து ஆட்டி.
ஓங்கலிடையே தமிழின் ஒளியாய்
உலகு புரக்கும் உழவத்தமிழா..உனை
உறிஞ்சும் தும்பிகள் உலா வந்திடும்
கள்ளம் அறிதி! எழுவாய் நீயே
இருள் கிழிக்கும் விடியல் பரிதி!

====================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (16-Jan-16, 6:19 am)
Tanglish : vidiyal parithi
பார்வை : 101

மேலே