காற்றாய் நுழைகிறாய்

கொஞ்சம் கொஞ்சமாய்
அடுக்கி.. நிஜம் தொலைந்த
வாழ்வின் பக்கங்களை
நிறம் விலக்கி
கனவுகளாய் சேமிக்கிறேன்

தொடர்பு அறுந்து
பாதியில் கை விடப்பட்ட
பட்டம் ..காற்றில் திசை
கொண்டு அசைந்த படி
உயர எத்தனித்து
தரை படர்கிறது

எண்ணமெல்லாம்
வண்ணம்அள்ளி
விசிறிய படி ..தெருக்களில்
ஒட்டி உரசி நகர்ந்திருக்கிறாய்
உயிர் துகள்கள்
ஓலமிடுகின்றன

தொலைத்த இரவுகளின்
இடைவெளி குறைக்க
பகலிலும் சொப்பனம்
கண் விழித்த படி துயில்கிறேன்

குறை நிரப்பு மானியமாய்
கைகளில் சேர்ந்த நீ
உயிரின் பசி போக்க
உரமிடுகிறாய் -வேர் தொட்டு
காள் ஊடே உரியமடைந்து
இலைகளின் இடையில்
பூக்களில் விரிகிறாய்


இறுக்கப்பட்ட கதவுகளை
புன்னகையால் உடைக்கிறாய்
இதயம் துடிக்காத
இடம் தேடி ..உயிரை ஒளிய
வைக்கிறது
கொஞ்சம் வலிக்கையிலும்
பாரம் கூடி உணர்வு கனக்கிறது.

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (17-Jan-16, 7:51 am)
பார்வை : 143

மேலே