சரியோ பிழையோ அறியேன் யான்

சோகத்தில் கிடந்து
தேகத்தை இழந்து
தியாகத்தால் விளைந்த
சுதந்திரம்
சிற்றின்பத்தால் சுருங்கி
வார்த்தை வசீகரத்தால் மயங்கி
சிந்திக்காத ஓட்டால் உடைந்து
சுயநலத்தால் மரித்து
மயானம் செல்கிறது..
சுதந்திரத்தின்
நுண்மைப் பொருள் அறியா
மேன்மக்கள் மத்தியில்
ஆயிரமாயிரம் போராளிகள் ஈன்ற
அதன்
இறுதி ஊர்வலத்திற்கு
நற்பண்புடனே தோள் கொடுக்க
நால்வர் துணை இல்லை..
துணை தேடுகிறது அது
காற்றோடு பறக்கும்
காகிதம் போல்..
தோள் கொடுத்தால்
உயிர் பிழைத்து விடும்
பரிசுத்த பரமபிதா
ஏசுவைப்போல்..
மனிதன்
அறிந்தும் அறியாமலும்
பெற்று விட்ட
சரியோ பிழையோ
இந்தச் சுதந்திரம்..
அறியேன் யான்..