வழியனுப்ப வந்தவள் வாழ்வினுள் நுழைந்தாயே

முதன் முறையாக சென்றேன் விமான நிலையத்திற்கு...
பணி புரிய அயல் நாடு செல்ல...
வழியனுப்ப உறவுகளெல்லாம் வந்திருக்க...
என் பார்வையும் சுற்றி சுற்றி பார்த்திட..
சற்று தள்ளி நின்ற பாவை மேல்..
என் விழியும் பதிந்திட...
அதுவரை உன்னை கண்டதில்லை..
இருப்பதோ சில மணி நேரம் தான்...
எவரிடமும் எதையும் பேசாமல்..
உன்னை ரசித்திட தொடங்கினேன்.
அந்த நொடி தெரியவில்லை...
உன்னில் நான் முழுவதும் சரணடைந்தது..
சில நொடியில் தெரிந்தது..
நாமிருவரும் உறவுகள் என்று...
யாரேன்று அறியாமலே...
மனதிற்குள் நுழைந்தவள்...
யாரேன்று அறிந்ததும்...
மனதிற்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்தாயே...
சில நொடியில் உன்னை பிரிந்திட..
போய் வருகிறேன் என்று உதட்டளைவில் சொல்லி...
பிரிந்திட மனமில்லாமல் உன் நினைவை சுமந்து செல்கிறேன்...
நாட்களும் நகர்ந்தது...
நினைவாய் நம் எண்ணங்களும்...
ஒன்றானது தொலைதொடர்பால்...
மனம் விட்டு பேசினோம்...
மகிழ்ச்சியில் என் மனதை உனதாக்கி...
உன் மனதை எனதாக்கினாய்...
எந் நொடியும் என்னிடம் பேச நீ துடித்தாய்..
என்னை விட
என்னையே அதிகம் நேசித்தவள் நீ.
காலை, மாலை...
கன நொடியும் என்னை சிந்திக்கிறாய் நீ...
அன்று...
ஒரு நொடியில் என்னை தவிர்த்த நீ.
இன்று...
எந்நொடியும் என்னையே நினைக்கிறாயே...
வரமாய் என் வாழ்வின் வசந்தம் நீ...
நம் காதல் அறிந்த உன் தாயும்...
தடையாய் நிற்கவில்லை...
இருந்தும்...
என் தந்தை சரியென்றால் சரியென
உன்னிடம் கட்டளையிட...
அதுவரை பேசிட வேண்டாம் என
உன்னை தடுத்திட...
என் கண்ணே..
என் மேல் நீ கொண்ட நேசம்...
தடையை தகர்த்தெறிந்து பேசுகிறாய் தினமும்...
எனக்காக...
பொய்யை உரைத்து...
உண்மையை மறைத்து...
உணர்வாய் உயிரை தருகிறாய்...
என் மேல் நீ கொண்ட பாசத்தை என்ன சொல்ல..
எந்நொடியும் என்னிடம் பேசிட துடிக்கிறாயடி...
இவ்வுலகில்...
என்னை அதிகம் நேசிக்கும் என் தாய்க்கு பின்..
என்னை அதிகம் நேசிப்பவள் நீயடி..
என்னை நினைத்திடாமல் நீயில்லை...
உன்னை பிரிந்திடாமல் நானிருக்க.
ஏங்குகிறேன் அனுதினமும்...
தவமாய் காத்திருக்கிறேன்....
எந்நொடி தாராமாய் நீ வருவாய் என..

எழுதியவர் : (19-Jan-16, 2:34 pm)
பார்வை : 57

மேலே