முத்தம்மா

அவள் அழகை வர்ணித்ததில்லை!
தலை கோதிய அவள் கைகளுக்கு,
முத்தங்கள் தந்ததில்லை!
ஒரு நாளும், நானாக அவளை
நலம் விசாரித்தது இல்லை!
அவள்,
அதை எதிர்பார்த்ததுமில்லை!

மயில் தோகை போலே,
பரந்து விரிந்த கூந்தல்!
வெள்ளந்தியான கிராமத்து மனம்!
தேடி கிடைக்காத தேவதை!
என்னை பெற்றெடுத்த பேரழகி!!

நெற்றியில் முத்தங்கள் பதித்தபோது,
எச்சில் என திட்டியது ஒரு காலம்!
என் தலைக்கு தலையணையாய்,
உன் மடி இருந்தது பொற்காலம்!

எந்த வலிகளையும் சொன்னதில்லை!
அவள் மரணம் உட்பட!!

வானத்தில் நட்சத்திரமாய்,
எனை பின் தொடர்கிறாள்!

என் செல்லம் முத்தம்மா!!!

எழுதியவர் : Sherish பிரபு (21-Jan-16, 3:17 pm)
பார்வை : 121

மேலே