மழை

நீலம் நிறைந்த நீள வானில்
வெள்ளை மேகம் கலைந்து பறக்கும்
நிலநீரை தானுறிஞ்சி தன்னுள்ளே சேர்த்திட்டே
ஒருதிரண்டே ஊர் மறைத்து காரிருளால்
விழி வியக்க மின்னல் மிளிர்த்து
செவி அழிக்கும் இடி இடித்து
கறுத்த முகில் விரித்துக் கொட்டும்
விண் மழையை விடியும் பொழுதில்
நிழல் நிறுத்தி நிலம் நிறைக்க
நெடுங் கோடாய் நிலம் உதிர்த்து
நீங்காப் புகழ் எடுத்தாய் நித்தம்
உண்ண சத்தம் கொடுத்தே மொத்தமும்
கொட்டி சுத்தமாய் அழித்தாய் புழுதியை
வறண்டு போகும் முன்னமே வளம்
கொழிக்க வனம் முதலாய் பொழிந்தே
கடன் கழித்தே மகிழ் வளித்தாய்
இந் நாட்டிற்கே நம்பிக்கை விவசாயி
அவரகம் நிறைய நீ பொழிந்து
பார் முழுதும் பால் நிறைத்தாய்
நீயின்றி இல உலகென்றே வள்ளுவனும்
வாய்மொழியும் வழங் கிட்டான் அன்றே
இன்பம் நிறைந்தோடும் துன்பம் கரைந்தோடும்
விடியும் பொழுதில் உன் வரவால்
உயிர்கள் பயிர்கள் நிலைத்தோங்கும் நின்னால்.

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (21-Jan-16, 9:19 pm)
Tanglish : mazhai
பார்வை : 110

மேலே