உன் மௌனம்

விழித்தெழுந்தது உன்
நிலவு முகம் கண்டு
மூடிக்கிடந்த என் விழி இரண்டும்
புதைந்து கிடந்த என் இதயம்
துடித்தெழுந்தது உன்
காதல் வரவை கண்டு
ஆனால் என் எண்ணங்கள்
மட்டும் சோர்ந்து கிடந்தது
உன் மௌனம் கண்டு..! 😔😔😔

எழுதியவர் : காஞ்சி சத்யா (22-Jan-16, 4:34 pm)
Tanglish : un mounam
பார்வை : 168

மேலே