உன் அழகினில் நினைவினில் ஒரு கஜல் தமிழினில்

உன் அழகினை என்னவென்று புகழ்ந்திடுவேன்
இரவும் பகலும் உன் நினைவினிலே நான் நனைந்திடுவேன்

இந்த வெண்மை நிலவு உனக்கென்ன உவமை
வண்ண நிலவே உன்னையே நான் வரைந்திடுவேன்

ஓடிடும் இந்நீரோடையின் சலனத்தில் எனக்கென்ன தாகம்
அள்ளி நீ தந்திடும் உன் அன்பினையே நான் பருகிடுவேன்

காற்றோடு கலைந்தாடும் கருங் கூந்தலில் என்ன இனிமை
என் மார்பினில் வந்தது தழுவிடும் போதுதான் நான் மகிழ்ந்திடுவேன்

ஷுக்கிரியா என்றிடவோ அன்றி நான் நன்றி நவின்றிடவோ
உன் அழகினில் நினைவினில் ஒரு கஜல் தமிழினில் நான் எழுதிடுவேன்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-16, 4:22 pm)
பார்வை : 296

மேலே