கண்மணியின் காதல்

கண்ணுக்குள் பூக்கள் பூப்பது போல்
அவள் கண்கள் எதிர்கால கனவுகளில் தினம் இன்புற்றது ..
அந்த கண்களுக்கு எப்படி தெரிந்திருக்கும் பூக்கள் எல்லாம் வாடி போகும் என்று ..

சின்ன சின்ன ஆசைகளை நெஞ்சில் சேமித்து வைத்த
அவள் சின்ன இதயத்திற்கு எப்படி தெரிந்திருக்கும் ஆசைகள் என்பது பாரங்கள் என்று ..

நம்பிக்கையே வாழ்கை என்பார்கள்
அந்த நம்பிக்கை இவள் வாழ்கையை அழிக்கும்
என்பதை அறிந்திருந்தால் இந்த பூக்களில் காதல் பூக்காமலே இருந்திருக்கும் ..

சில வருடங்கள் உண்மை காதல் கொண்டதுக்கு வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடிக்கும் கண்மணியே
உன் கண்மணி கரைந்து உன் வாழ்கை இருடாகியதா .. இல்லை ஏமாற்றத்தால் வாழ்க்கை வெளிச்சம் இழந்ததா ..

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (22-Jan-16, 4:20 pm)
Tanglish : kanmaniyin kaadhal
பார்வை : 148

மேலே