தரையில் போடப்படும் கல்லிலே

தரை தளத்தில் ஒரு கற்பனை
மஞ்சள் பூக்களும்
சிகப்பு பூ க்களும்
அடர்த்தியில்லாமல்
நேர்த்தியாக.

நான்கு கற்களில் ஒரு
பூ விரிகிறாற் போல்
மொட்டவிழ்ந்து மலராகும்
அதீத தருணத்தை
மென்மையாக


வரை தீட்டுகிறான்
கலைஞன் தரையில்
போடப்படும் கல்லிலே
எங்கும் நோக்கின்
மலர் கமபளமாக .


மஞ்சள் மங்களத்தையும்
சிகப்பு பூரிப்பையும்
அள்ளித் தெளிக்க
கண்டேன் ஒரு
அதிசயமான கற்களான
தரை விரிப்பை

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (24-Jan-16, 4:02 pm)
பார்வை : 447

மேலே