உய்வாய் உலகில் உண்மையடா
அந்தோ..மாய உலகமடா!
மறைந்து போனது மனிதமடா
எங்கு பார்த்தாலும் கலகமடா
ஊற்றெடுப்பதெல்லாம் உதிரமடா...
உலகில் நிம்மதி இல்லையடா
நடப்பதெல்லாம் கோர யுத்தமடா
அழியும் உயிர்கள் அதிகமடா
துப்பாக்கி குடிப்பது இரத்தமடா...
யுத்தம் எங்கும் இருக்குதடா !
சித்தம் கலங்கி நிற்குதடா !
பித்தன் ஆகி அலையுதடா !
மொத்தம் போராய் ஆகுதடா !
பக்தி மார்க்கம் வேணுமடா !
முத்திக் கிடைக்கும் நிஜமடா !
சக்தி உன்னைக் காப்பாளடா !
யுத்தம் வேண்டாம் கைவிடடா !
இனிதை செய்து வாழிந்திடடா !
புனிதம் உன்னைச் சேருமடா !
மனிதம் செழிக்க வகைசெய்யடா !
தினமும் இதையே நினைத்திடடா!!!
நல்லது செய்யப் புறப்படுடா !
அல்லதை நீக்கப் புறப்படுடா !
உள்ளதை நானும் சொன்னேனடா..!
கள்ளமும் இதிலும் வேண்டாமடா !
எங்கும் இன்பம் சூழுமடா !
பொங்கும் புதுமை' உண்மையடா !
தங்கும் நிம்மதி சொல்வேனடா !
சிங்கம் போல நீநில்லடா !
உயிராய் நீயாய் நிற்பாயடா!
பயிர்கள் தழைத்து ஓங்குமடா!
உண்மை பலவும் உரைத்தேனடா !
பெண்மை போற்றி வாழ்ந்திடடா !
ஆசானை மதித்து வணங்கிடடா !
வாசங்கள் உன்னைச் சேருமடா !
ஏசாப் பெரும்புகழைப் பெறுவாயடா !
ஆசிகள் உனக்கும் கிடைக்குமடா !
பொய்யும் புரட்டும் வேண்டாமடா !
மெய்யாய் உலகில் வாழ்ந்திடடா !
செய்வாய் நீயும் தியாகமடா !
உய்வாய் உலகில் உண்மையடா !