அன்பும் அரசியலும்

அரசியலும்
"""""''''''''""""""''''''''"""""'''''''""'

இரவோடு இரவாக
கலைக்கப்பட்ட
அரசியல் கட்சி ஒன்றிலிருந்து,

நீ எந்தத் தொகுதிப்பங்கீடும்
இல்லாமல்
தனித்து நிற்கின்றாய்!
ஏன்?
என்னிடம் இருந்தும்!

உன் பேச்சுக்கள் யார்
யாரையோ?
வசிகரித்தாலும்
என்னை ஸ்பரித்த நிமிடங்களுக்குள்
உறைந்து போயுள்ளேன்!

எனக்கு பிடித்த
உன் குறும்பு வழிந்த
அம்மூஞ்சிதனத்தை
துடைத்து வழித்து என்னை
வெறுமையாக்கிவிட்டாய்!

நாள்காட்டி ஒன்றின்
கிழிக்கப்பட்ட திகதிகளாய்
உன்னை தொலைத்து
நிற்கின்றேன்!

தேர்தல் வாக்குறுதிகளின்
வாசனைகளில் மக்கள்
மயக்கப்படலாம்!

நேர்மையான கோடு ஒன்று
அடிக்கடி சபலப்பட்டு
விழுமியங்களை தொட்டுப்பார்க்கலாம்!

வெற்றி ஒன்றே
தலையில் சுத்த
புத்திசுகாதீனமானவர்கள்
தீக்குளிக்கலாம்!

உன் வெகுளித்தனமான,
நான் முத்தமிட்ட முகம்.
போஸ்டர்களில்
அரசியல் சாயம் பூசி
.இரவையே
பயமுறுத்தலாம்!

நாளைய அடைமழையில்
பத்தோடு பதிநொன்றாக
உன்னுடைய சுவர்ஒட்டிகளும்
கால்நடைகளுக்கு
இலவச உணவாகலாம்வெள்ளைவேட்டியும் முறட்டு
மீசையும் ஆதிக்கனவுக்கு
துணைபோகும் உன்னை!

இப்போதுதெல்லாம்
எனது கனவுகளுக்குள் இழத்து
பிடித்து அணைத்தாலும்
நீ வருவதில்லை!

நெடும் பயணம் ஒன்றில்.
என்னை விட்டு உன்னால்
போகமுடியாது!
என் நினைவுகளுக்குள்
உன்னை
பத்திரப்படுத்தியுள்ளேன்!

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை"""
அரசியல் சாக்கடை ஆடைகளை
களைந்து,
அம்மணமாக வா!
அன்பால் உன்னை அணைத்துக்கொள்கிறேன்!
ஏனனில்
எனக்கு நீயும்!
உனக்கு நானும்!!!

எழுதியவர் : லவன் (29-Jan-16, 12:41 am)
Tanglish : anbum arasiyalum
பார்வை : 70

மேலே