என் மரணப் படுக்கை உன் மடியில்

அன்பே ஆயிரம் முறை உன்னிடம் நான் கேட்டேன்
என் தலை சாய்த்து உறங்கவேண்டும் என்று

உனக்கு பிடிக்கவில்லை என்று என்னை ஏற்க மறுத்தாய்

நானும் வாடிய முகத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்

இறுதியாக யோசித்தேன் ஒருவரின் நேசம் அவர் பிரிந்த பின்தான் புரியும் என்று

நான் இறக்கும் இந்த ஒரு நிமிடமாவது என்னை பிடிக்காமல் உன் மடி கொடுத்தால் போதும்

என் மரணம் மகிச்சியில் முடியும் அன்பே .

படைப்பு:-
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (5-Feb-16, 9:26 am)
பார்வை : 845

மேலே