மனசெல்லாம் 8

{ கதை சுருக்கம் : ராதிகாவினை வீடு செல்லும் வழியில் மறித்த சித்தார்த்,போக வழியில்லாது பயந்து நின்றபடி ராதிகா }

ராதிகா மகிழ்ச்சியோடு பாடியபடி,துள்ளி துள்ளி மெல்ல நடந்து வர எதிரில் வந்த சித்தார்த்தை கண்டதும் முற்றிலுமாய் அமைதியில் கீழே பார்த்தபடி நடந்தால்.சித்தார்த் சிரித்தபடி அவளை காண,அவளோ அவனை நிமிர்ந்தும் பாரது கடந்து சென்றால்.அவள் கடந்து செல்லவும் உறைந்து இருந்த சித்தார்த்தை அவனின் நண்பன் " ஏ அவ போறா டா எந்த உலகத்துல இருக்க ...".சித்தார்த் சுய நினைவிற்கு வந்து " ராதிகா ...நில்லு " என்றான்.அவள் காது கேளாது வேகமாக நடக்க சித்தார்த் சுழற்சி வாகனத்தில் விரைந்து அவள் முன் நின்று கைகளை நீட்டி " கூப்பிட்டா நிக்க மாட்டியா,உன் கிட்ட பேசணும் ".

ராதிகா பேசாது அவன் கை மீறி செல்ல வகை தேடியபடி,கைகளில் உள்ள விரல்களோ ஒன்றொன்று பிடிக்க,கண்களது அவனை தவிர சுற்றி வட்டமிட பயந்து தவித்து நின்றால்.சித்தார்த் கையில் ஒரு காகிதத்தை நீட்டியவாறு இதனை வாங்கிக்கொள் நாளை முடிவினை கூறு என்றான்.அவளோ யாரோ வருவதைப்போல் அவன் பின்னே திகைத்தபடி காண அதனை கண்டதும் அவன் திரும்ப, அச்சோ என்னக்கு இதலாம் பிடிக்காது என்று கூறியவாறு நழு ஓடினால்.

அவனோ சிரித்தபடி சென்றுவிட்டான்.அவன் சென்ற பத்தாவது நிமிடத்தில் விரைந்து தனது தோழி வீடு சென்று இலையா,சித்தார்த் வந்து என் மூன் நின்று கையில் உள்ள காகிதத்தை வங்கிக்கோ அப்படினு சொன்னாங்க நான் அப்படி பயந்து பின்னாடி யாரோ வர மாறி பார்த்து தப்பிசிடன் அந்த காகிதத்துல என்ன இருந்து இருக்கும் தெரியல என்று கூறி செய்தும் காட்டினால்.

மறுநாள் காலை பள்ளிக்கு செல்லும் வழியிலும் அவனை கண்டால்.தினமும் இது தொடர்ந்தது.ராதிகா வீட்டில் மிகவும் பாசம் அவள் தனக்கு பெண் பறவை என்ற சுழற்சி வாகனம் வேண்டி வீட்டில் கேட்டு அன்று மாலையே வாங்கிவிட்டால்.அதனை கொண்டு பள்ளி செல்ல தொடங்கினால்.பல வித விளையாட்டு ஓட்டபந்தயம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டு விளையாடுவாள்.சுழற்சி வண்டியினையும் வேகமாக ஓட்டுவாள்.

ஒருநாள் சித்தார்த் பின் தொடர அவன் நெருங்காத வண்ணம் பறந்தவாறு ஒட்டி சென்றால்.அவள் தொடங்கி நின்ற இடம் அவளின் வீட்டு வாசலில்.அவனோ பின் தொடர்ந்தவாறு அவளின் வீட்டு முன்னிலையிலே பேசினான்.அதனை ராதிகாவின் தாய் பார்த்துவிட்டால்.

சித்தார்த் நிலைமை என்ன நடந்ததை நாளை காண்போம்....

எழுதியவர் : ச.அருள் (5-Feb-16, 9:25 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 240

மேலே