காற்றலை காதல்

விழியால் இதுவரை கண்டதில்லை..
காற்றலையில்....
செவியோரம் பேசி காதல் கொண்டோம்...
என்னவன் நீ தான் என்று நான் அறிந்திடாமல்...
உன்னவள் நான் தான் என்று நீ தெரிந்திடாமல்...
நம் மனசுக்குள்...
நாமென்று காதல் வட்டமிட...
முகம் பாராமல் காதலித்த நம் விழி..
அலைப்பேசியில்..
நம் பிம்பத்தை பரிமாற்ற...
விடியல் கிடைத்தது நம் காதலுக்கு..
வானவில்லின் வர்ணங்களாய் எண்ணங்கள் சுழன்றடிக்க..
என்னவன் நீதானே என்று ,,,
என்னுள்ளே கோட்டை கட்டிட..
நீயிருக்கும் இடம் எங்கோ..
நானிருக்கும் இடம் எங்கோ...
வெவ்வேறு இடங்களில் நாமிருக்க.
நம் மனம் மட்டும் ஓரிடத்தில் இருக்க
முகம் பாராமல் இருந்த நாமும்..
இன்று..
முகம் பார்த்திட நான் நினைக்கையில்..
என் மனதின் ஆனந்தத்தை நான்..
என்ன சொல்ல...
ராமனிருக்கும் இடமே சீதைக்கு அழகுப்போல்..
என்னவன் நீயிருக்கும்...
இடம் தேடி ஓடி வந்தேன்...
என்னவனை முதன்முதலாய் காண்பேன்...
என்ற எண்ணத்தில்...
என் ஐந்து விரல்கள் பிடித்திருந்த அலைப்பேசியில்...
என் மற்ற ஐந்து விரல்கள்...
என்னவனின் பத்து எண்களை அழுத்திட..
அடித்த மணியோசை ஒவ்வொரு துடிப்பிலும்..
என் மனவோசையின் துடிப்பு அதிகரித்தது..
என்னவனின் குரலோசை கேட்டதும்..
என்னையே மறந்தே நின்றேன்..
என்னவன் வருவான் என்று...
நினைவோடு நான்...
எண்ணற்ற கற்பனையில்...
வழியோரம் விழி வைத்து நின்றேன்.
வருவது என்னவன் என்பதால்...
காத்திருக்கிறேன்...
காற்றலையில் காதல் கொண்டவனை...
காலம் தான் கடந்தது...
கண் விழியோ காணவில்லை...
காரணம் தெரியவில்லை..
புரியாமல் என் மனம் கலங்குகிறது..
கனவுகள் எல்லாம் கரைந்திட...
என் கண்ணீர் இங்கே நிறைந்திட..
என்னவன் நீ தான் என்று...
எண்ணத்தில் நான் வந்தது தப்பா...
ஆசையாய் வந்து காத்திருந்தேன்..
கனவிலும் நினைக்கவில்லை..
கண்ணீரோடு செல்வேன் என்று...
காற்றலை காதலனை காணாமல் ..

எழுதியவர் : (6-Feb-16, 12:19 pm)
பார்வை : 135

மேலே