நாகரீக பூமி

மேகங்களுக்கு இடையே நாணும்
மழை கூட
பாமர விவசாயின் கண்ணீரை
கடன் கேட்கிறது
சிறு துளி மழை பொழிய!!!!!...

நாகரீக உலகில்
தூசிகளை சுவாசிக்கும்
காற்று கூட
ஏழை விவசாயின்
தோட்டத்தை தான்
பாழாக்குகிறது........

அலைகளுடன் காதல் கொண்ட
ஆர்பரிக்கும் ஆற்று நீர் கூட
ஏழை பாமரன் வீட்டை தான்
பட்டா போடுகிறது.......

தீண்டும் தென்றலில்
தான் கொண்ட தனலை
தெளிக்கும் அனல் கூட
பாமர குடிசையை தான்
அணைக்கிறது அதன் கரம் கொண்டு.......

பசிக்கும் வயிறு
உணவு வாய்க்கு
அது போல
அழும் விவசாயம்
ஆறுதலோ ஏதும் அறியா
நாகரீக சமூகத்திற்கு.....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (10-Feb-16, 4:53 pm)
Tanglish : naakarika poomi
பார்வை : 88

மேலே