அன்புள்ள ஆசிரியரே,
சரியான நேரத்திற்கு பள்ளிக்கூடம் வாங்க.
முறையான கல்வியை சின்னபுள்ளைக்கு சொல்லி தாங்க.
வறுமையில வாடும் பசங்க
படிக்கும் பள்ளிக்கூடம்- நீங்க
பொருமையாக சொல்லி கொடுத்தா
வாழ்வு வளப்படும்.
படிக்காத அம்மா,அப்பா நிறையபேருங்க - நீங்க
அடிக்காம அன்பைகாட்டி பேசிபாருங்க.
வீட்டுவேல காட்டுவேல செஞ்சிதானே வாராங்க - நீங்க
காட்டும் கொஞ்ச பாசத்தில
அடிமையாகிப்போவாங்க.
நாட்டுகதை, ஏட்டுகதை நாளும் சொல்லி தாங்க.- பசங்க
வீட்டுக்குள்ள அடைஞ்சிடாம
வெளியகொண்டு வாங்க.
சோகங்களை விட்டு விட்டு
சுருசுறுப்பா போங்க
சொந்தங்களா பசங்களைதான்
எண்ணிசொல்லிதாங்க.
சொல்லிதரும் முறையில் பல
புதுமைகளை சேருங்க.
வெள்ளிநிலா பிள்ளைகளை
பேசவிட்டு கேளுங்க.
சாதிமதபேதங்களை சாக்கடையில்
வீசுங்க.
மோதிடாமல் வன்முறையின்
வேரருக்க பேசுங்க.
உளிபோல இருக்கும் நீங்க
உண்மையில சாமிங்க.
சிலையாக செதுக்கி நல்ல
பேர்எடுத்து காமிங்க...