பிறப்பும் இறப்பும் நொடிகளில்--முஹம்மத் ஸர்பான்

அடைக்கப்பட்ட இதயம்
உடைக்கப்பட்டு காதல்
கனவுகள் நெருப்பில் தூக்கி
வீசப்படும்.ஆசை கொண்ட
மனதும் விரகம் எனும்
சிறையிலிருந்து அவளின் மடியில்
கண்ணீரோடு தலை வைத்து
உறங்கும்,பல நாள் தூக்கம்
தொலைத்த இரு சோடி கண்கள்
ஒரு நாள் நினைவிலும்
மறுநாள் நினைவிலும்
ஒன்று சேரும்.....