அவளுக்காக---முஹம்மத் ஸர்பான்

உதிரங்கள் நிறைந்த இதயம்
காதல் வந்தால்
கண்ணாடி வண்ணத்தில் மாறிவிடும்.
அவள் மை பூசப்பட்ட விழிகள்
என் நெஞ்சில் சில நேரம்
பட்டாம்பூச்சி போல் சிறகடித்துப் பறக்கும்.
நிலவை சாட்சியாக வைத்து
அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும்.
நிலவைத் தவிர வேறு யாரும்
அவள் கால்களுக்கு இணையாக முடியாது.
வயல் வரப்பின் ஓரம் பந்தி வைத்து
நாட்டுச் சோறு என் கைகளால் ஊட்டிடுவேன்.
அவள் வாய் கொப்பளிக்கும் நீரை
என் கைகளால் அள்ளிடுவேன்.அவள்
பாதத்தில் சிறு முட்கள்
குத்தினாலும் உலகிலுள்ள
பூந்தோட்டம் எங்கும் தீ வைப்பேன்...

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Feb-16, 9:12 am)
பார்வை : 174

மேலே