நிலவுக்கொரு பாட்டு

.....................................................................................................................................................

நிலவே நிலவே என் நிலவே
தேயும்போது வலிக்கிறதோ..?
வலித்தால் வலித்தால் என்னழகே
மேகத் திரைக்குள் அழுவாயோ?

ஓடி ஓடி உழைப்பதனால்
ஓய்வெடுக்கப் போவாயோ?
மாடி அறைதான் என் வீடு...
மறுக்காமல் நீ வருவாயோ?

வளர்ந்து வளர்ந்து முழுநிலவாய்
வரிசைப் பல்லுடன் சிரிக்கின்றாய்..
தளர்ந்து தளர்ந்து தேய்வதென்ற
தலையெழுத்தை ஏன் பிடிக்கின்றாய்?

இதுவரை நடந்தது எப்படியோ..
இனிமேல் உனக்காய் நானுள்ளேன்..
எதுவரை போகும் கேட்டிடுவேன்..!
இரண்டில் ஒன்று பார்த்திடுவேன்..!

வலியது தீர வில்லையெனில்
வானம் விட்டே தூக்கிடுவேன்....!
ஒளியது ஏதும் குன்றாமல்
உள்ளக் கோயிலில் ஏற்றிடுவேன்..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (13-Feb-16, 12:38 pm)
பார்வை : 176

மேலே