என்ன வேண்டும்
என்ன வேண்டும் என்றது காதல்
எல்லாம் வேண்டும் என்றது காமம்
என்ன வேண்டும் என்றது இரவு
எல்லாம் வேண்டும் என்றது இருள்
என்ன வேண்டும் என்றது கடல்
எல்லாம் வேண்டும் என்றது அலை
என்ன வேண்டும் என்றது கனவு
எல்லாம் வேண்டும் என்றது நினைவு
என்ன வேண்டும் ?
எல்லாமே வேண்டும் இந்த இரவில்