தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-5

“நீல விழியாளே உன்னை நினைக்காத நாளில்லையே
உன் கோள விழியாலே என்னை மென்றுத் தின்றாயே
நிலையில்லா வாழ்வுக்குள் எத்தனை ஆசை
நிலவே உன்னையடைய செய்கின்றேன் பூசை..!

ஒருதலை காதல் எனதாகும்
ஒருவகையில் இது சரியாகும்
ஒருநாள் உனை நான் பாத்தேன் தனியே
அதுமுதல் நீதான் என் காதல் முனியே..!

ஊரூ வேறு – உறவு வேறு
உள்ளம் ஒன்றானால் எல்லாம் ஜோரூ
ஆசை கோடி – அழகு ராணி
என் மன வானில் நீதான் தோணி!

துன்பம் என்பது துரும்பை போல்
இன்பம் என்பது இரும்பை போல்
இயற்கை அருளிய வாழ்க்கை முறையில்
இன்பமும் துன்பமும் இருதுருவம் போல்!

இன்னொரு பிறவி நான் எடுக்க வேண்டும்
அதிலும் நீயே எனக்கு கிடைக்க வேண்டும்
காதலொரு கவிதையாகும்
கவிதை சிறக்க காதல் வேண்டும்
நான் எழுதும் கவிதை ஒவ்வொன்றும்
உன்னைச் சென்று சரணடைய வேண்டும்!

எழுதியவர் : இரா.மணிமாறன் (14-Feb-16, 9:15 pm)
பார்வை : 88

மேலே