விவசாயி
![](https://eluthu.com/images/loading.gif)
உலகுக்கே சோறூட்ட - தன்
உயிரையே சேறு தீட்டியவன் !
உயிர் வளர்க்க உதிரம் காய்ச்சி
பயிர் வளர்த்த படையவன் !
மண்ணை புடம் போட்டு மனிதனை
பண்படுத்தி புண் பட்டுப் போனவன் !
வெயிலில் உயில் எழுதி உலகை
வியர்வையால் துயர் துடைப்பவன் !
இடி மின்னலுடன் மழை ஏந்தி நிதம்
விடி வெள்ளியாய் பூப்பவன் !
கச்சையணிந்த வையகத்தை
முழுப் பச்சை உடுத்தி போர்த்தியவன் !
ஏர் எடுத்து உழுத கையினால்
பார் முழுதும் பசுமை பூசியவன் !
வேரோடி நிற்கும் மரமவன்
விளைச்சல் பெருக்கும் உரமவன் !
அகிலத்தை நிறைப்பவன்
அகலித்து நிலைப்பவன்
அதனால் தான் உழவன் அவன் !
- பிரியத்தமிழ் -