ஏதோ ஒரு இக்கட்டில் வாழ்கிறோமே, யாரையோ சரிக்கட்டி

உண்மையைக்கூட
உரக்க உரைக்க
சுற்று முற்றும்
உற்று நோக்குகிறோம்,

நம்மால் உருவான சமூகம் கூட
நமக்கு எதிர்த்திசையில் பயணிக்க
வேண்டா வெறுப்புடன் நாமும்
பயணிக்கிறோம்,
இந்த வெற்றுப்பயணத்தில்
உரைக்க நினைக்கும் உண்மைகள்
எல்லாம் வெற்று வாதங்களா?

"நிஜம் அல்லது நிதர்சனம்
எடுத்துச்சொல்லும் 'விசாரணை'
சில சிந்தனையாளர்களால் மட்டுமே
அங்கீஹரிக்கப்பட
தமிழ் சினிமா அடுத்த கட்டம் நோக்கி
கம்பீரமாக பயணிக்கிறது"
- ஒரு படைப்பாளியின் கருத்து

கேட்டு கற்று தெளிய வேண்டிய
சமூகம் இன்னமும் இனியும்
உறைந்து கிடந்தால்

மாற்றம் என்ற மகவுவை
பிரசவிக்காமல்
மலடாகியே தீருவேன்
என்கிறதோ
என் சமு'தாயம்'?

எப்போது தான் அது
போடும் 'தாயம்'?
(ஆட்டத்தை ஆரம்பிக்க?)

எழுதியவர் : செல்வமணி (15-Feb-16, 11:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 254

மேலே