என் நெஞ்சை தாலாட்டும் தேவதையே
காதல் செய்ய துடுப்பாக வந்து
இதயத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்து
புலன்கள் பலம் பெருக்கும்
ஊக்கியாகவும் இருந்து
மலர்கள் போல வாசம் செய்து
என் நெஞ்சை தாலாட்டும் தேவதையே
ஏன் இத்தனை காலம்
தொலைவில் இருந்தாய்
உன் கண்ணில் என்னைத் தொலைத்து
என்னில் உன்னை தொலைத்து
காதலுக்கு ஒரு முகவரி உருவாக்குவோம் வா