உணர்வின் காதலை உணர்ந்தேன்

அமைதியான அறையினுள்,
அமைதிதேடி அலைகிறேன்,
அன்பின் அலைகளின்,
அரசனைதேடி அல்லிவிழி மூடாது,

வெளிப்படுதினாலே வெற்றி என்று தெரிந்தும்,
வார்த்தையது தடுக்கிறது,
வீசி சென்ற அவர் காதல் மனதை,
வெறும் காற்றில் தேடுகிறேன் வெளிப்படுத்தாமல்,

மௌனமே அனைத்திற்கும் முன்நிற்க,
மனதை எங்கனம் கூறுவேன் ?
மணவாளனின் குணமாய் நான் வடித்த சிற்பம்,
மன்னவன் தானே வந்து காதல் சொல்ல,

சிற்பமும் உயிர்க்கொள்ளுமோ என்று,
சிலிர்த்து போனேன்,
சிறிதும் குறையில்லை குணத்திலே,
சின்ன குறை உண்டு அது என் மௌனமே,

காதில் கேட்ட அவர் காதலை,
கவலை செய்தது என் மௌனம் - இருந்தும்
கடமைகளை முடித்து வருகிறேன்,
கண்மணியே காத்திரு என்று சென்றார்,

மனதின் எண்ணைத்தை கூறாதே,
மௌனத்தை தானே அறிந்திருப்பாரோ,
முதலில் பிடித்த குணமே அதுதானே,
மௌனதினையும் புரிந்துக்கொள்ளும் மனக்கள்வன்...

காத்திருக்கிறேன் மௌனத்தில் ....

எழுதியவர் : ச.அருள் (18-Feb-16, 9:16 am)
பார்வை : 266

மேலே