நியாபகங்கள் உயிராக வரும் காற்றோடு

(யாருமில்லா தனி அரங்கில் பாடல் மெட்டில் எழுதப்பட்ட காதல் வரிகள் )

நியாபகங்கள் உயிராக வரும் காற்றோடு வந்து இதயத்தில் நுழைய
வீசும் காற்றிலும் உந்தன் வார்த்தைகள் எந்தன் இதயத்தின் உயிராக !

நான் பேசுகிறேன் காற்றோடும்
விண்ணில் உள்ள நிலவோடும்
காண்வதெல்லாம் நீயாக
தினம் உன்னை எண்ணி ....

மொழியா
நம் காதல்
அதில் நீ நான்
உயிர் மெய்யா
ஆயுதமா அது காதல்
அதில் உயிர் நீ மெய் உடல் நான் ...

கணவனாய் என் அருகில் நீயும்
கண்டது கனவா நினைவா
கிள்ளினேன்
என்னை நானும்
வலி சொன்னது நிஜம்தான்
காதல் காதல் காதல் காதல் ....

நானும் இன்று தனிமை விரும்பி
உன்னை விரும்பி வாழ்கிறேன்
எண்ணமெல்லாம் வானவில்லின் வண்ணம் நீயடா !

நெஞ்சில் காதல் இருந்தால் போதும்
இல்லம் கூட கோவில் தான்
உண்மை காதல் செய்வதாலே தெய்வம் நாமடா !
உன் . . . . .

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (18-Feb-16, 9:59 am)
பார்வை : 310

மேலே