தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து20---ப்ரியா
வசந்த் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாய் ரியா சொல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம் இவளையும் இவள் தோழியையும் நம் எதிரி பிரதீக்கையும் பழிவாங்க சரியான நேரம் நமக்கும் கிடைக்கும் என்று எண்ணினான் வசந்த்.....!
"நீ என் மனைவியாகிவிடு" என்று வசந்த் சொல்ல அனைவருமே திகைப்பில் இருக்க ரியாவுக்கு மட்டும் அவனது ஏளனப்பார்வையின் அர்த்தம் புரிந்தது.
நம்மளை வைத்து பழிவாங்க நினைக்கிறான் நாம் செய்த தவறுக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை வாங்குவதே சிறந்தது இதுதான் முறை என்றவள் தைரியமாக சம்மதித்தாள்.
இவள் சம்மதம் தெரிவிக்கமாட்டாள் என நினைத்தவன் சம்மதித்ததும் கொஞ்சம் எரிச்சலடைந்தான்........சரி அப்போ உடனே புறப்படு என்றான்.
கீது குறுக்கிட்டு எங்கள் கோவில் திருவிழா அதற்காகதான் அவளை அழைத்து வந்தேன் இந்த ஒருவாரமும் இங்கு இருந்துவிட்டு வருவாள் என்றாள்......அவன் விடுவதாக இல்லை.....வந்தனாவும் இவளும் சேர்ந்துதானே வந்தாங்க இப்போது அவளே இல்லை இவள் மட்டும் இருந்து என்ன செய்ய போகிறாள்.
அதுமட்டுமில்ல இவள் இங்கிருந்தால் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனைதான் வரும் உடனே கிளம்பு என்று கட்டளையிட்டான்.....!
உள்ளே சென்ற ரியா தனது உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானாள்....கீதுவின் குடும்பமே சோகத்தில் உறைந்து போனது எப்படி இருந்த பிள்ளைங்க அடுத்த ஒரு பையனுக்காக பிரிந்துவிட்டார்களே அவன் நல்லவனோ?கெட்டவனோ?யாருக்கு தெரியும் அவன நம்பி உயிர்த்தோழியை மாட்டிவிட்டுக்கிட்டு போயிருக்கா என்ன நம்பிக்கையோ....?என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இதைக்கேட்டுக்கொண்டிருந்த ரியாவால் அழுகையை அடக்க முடியவில்லை அழுதுகொண்டே அவனுடன் சென்றாள்.
இவளது அழுகையும் கீதுவை மிகவும் பாதித்தது விஜய் அவளை தேற்றினான் "ஒன்றுமில்லை வசந்த் நல்லவன் ரியாவை நல்லா பார்த்துப்பான் என்று ஆறுதல்படுத்தினான்.
அவனது காரில் பின்னிருக்கையில் போய் அமர்ந்தாள்..... ஒரு முறை முறைத்தவன் பெரிய மகாராணின்னு மனசுல நினைப்பு என்று சொல்லி அவனது கோவத்தை வெளிப்படையாக காட்டினான்.......
அவனது அந்த பேச்சு அவளுக்கு சுருக்கென்று இருந்தது காரணம் முன்பொருமுறை காரில் அவனுடன் செல்லும் போது பின்னால் ஏறி அமர சென்றவளை முன்னிருக்கையில் இருக்க சொன்னவன் நீ என் ராணி தேவதைடி என்று வர்ணித்தான்...ஆனால் இன்று இவ்வாறு பேசுகிறான்...எல்லாம் கலிகாலம் அவன் திருவிளையாடல் என்று மனதிற்குள் நினைத்துகொண்டாள்.......!
இப்பொழுது எல்லாம் பொறுமையின்றி அதிவேகமாக நடந்துகொண்டிருக்கிறது செய்த தவறுக்கு உடனே தண்டனை..? எல்லாம் நம் தலையெழுத்து தோழி தோழி என்று உயிராயிருந்ததற்கு நமக்கு கிடைத்தது பெரிய பரிசு என்று மனதிற்குள் வருந்தினாள் அது அவள் முகத்திலும் தெரிந்தது.
சென்னைக்கு சென்றதும் ஒரு வீட்டின் முன்பு காரை நிறுத்தியவன் இறங்கினான் அவள் வெளியில் வராமல் உட்கார்ந்திருந்தாள்.......
உனக்கு என்ன நான் வேலைக்காரனா உன்கூடவே இருந்து எல்லாம் செய்யணுமா? இறங்கி வாடி என்று அதிகாரக்குரலில் ஒரு அடிமைக்காரரை அதட்டுவதுபோல் மிரட்டினான்.
அவனது குரலில் கால்கள் தடுதடுக்க இறங்கினாள் சுற்றிமுற்றி பார்த்தாள் அங்கு யாருமே இல்லை இதுதான் இவனது அரண்மனையா?என நினைத்தவள் அவனிடம் எதையும் கேட்கவில்லை அப்படியே அவன் பின்னால் சென்றாள்.
உள்ளே சென்றவன் இதுதான் "நம்ம" என்று சொல்ல வந்தவன் இதுதான் "என்வீடு" என்று முடித்துக்கொண்டான்.
குளித்துவிட்டு ரெடியா இரு நமக்கு கல்யாணம் என்றான்.
என்ன இப்போ......இன்னிக்கா..... கல்யாணம் என்று அதிர்ச்சியாய் கேட்டாள்.
ஆமா என்று நிதானமாய் பதிலளித்தான்.
ஒன்றும் புரியாமல் குளித்து முடித்து அவன் கொடுத்த புடவையையும் உடுத்திக்கொண்டாள்.
வா என்று அழைத்தவன் தன் பூஜையறைக்கு அவளை அழைத்து சென்றான் அங்கிருந்த ஒரு சாதாரண மஞ்சள் கயிறை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான் அவள் எதுவுமே பேசவில்லை மௌனமாய் நின்றாள்........
என்னடி கல்யாணம் என்றதும் ஊரகூட்டி கோவில்ல தாலிக்கட்டி மண்டபத்துல வச்சி ஊரறிய திருமண கோலம் காணலாம் என்று நினைத்தாயோ?ஊரறிய திருமணம் செய்து கொள்ள நீ என் மனைவியும் இல்லை உனக்கு நான் கணவனும் இல்லை நீ எனக்கு வேலைக்காரி மனைவி என்ற பெயரில் நீ எனக்கு ஒரு வேலைக்காரியாக முடங்கிக்கிடக்க வேண்டும் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி கொல்லணும் இதான் என் இலட்சியம் என்று ஒரு மிருகம் மாதிரி கத்தினான் வசந்த்.
மென்மையாய் இருந்தவனை இப்படி மிருகத்தனமாய் மாற்றிவிட்டோமே என்று அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்..... தாலி என்ற பெயரில் அவன் கட்டிய கயிறை எடுத்து ஒருமுறை அவளது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஒற்றிவிட்டு அதில் குங்குமமும் சந்தனமும் எடுத்து தடவினாள்.........அவளது இந்த செய்கை மேலும் அவனை எரிச்சலூட்டியது..
அவனது அறைக்குள் சென்று வழிந்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டு கண்களை மூடி பழைய நினைவுகளில் மூழ்கினான்.....
தொடரும்.......!!