முத்தமிழ் சிறக்கவே ---- மருட்பா ---- செவியறிவுறூஉ
முத்தமிழும் எங்கட்கு முக்கனியைப் போலவே
எத்திசையில் கேட்டாலும் இன்பமாய்த்-- தித்திக்கும்
உள்ளுசுவை இன்பம் உணரச் சுவைதரும்
தெள்ளுதமிழ்ச் செந்தமிழ்த் தேனானத் தாய்மொழித்
தெவிட்டாச் செம்மொழி தெளிவுறக்
கவிச்சுவை நிறைந்ததாய்க் கனிமொழி சிறக்கவே !