காதல் வறுமை ஏமாற்றம் தோல்வி

சிறுவனாய் ஒரு கனவை விதைத்தேன்
சிறகுகளோடு பறந்திட துடித்தேன்
சினிமாவில் நுழையும் எண்ணம்
சித்திரமாய் ஓடுது என் கண்ணில் . . . . .

காதல்
காலங்கள் கடந்து போக
கவலையும் கூடி போக
கனவுகளை நான் தேடி போக
கற்பனை என் பயணமாக
காதலும் குடியெறியது என் நெஞ்சில்
காத்திருக்க பொறுமையில்லை
காதலிக்கும் ஆசையை விரட்டி விட
கண்களில் வாலிபம் மறுக்க
காகித தாளில் கிரிக்கினேன்
காயங்களை கவிதையாக
கசக்கியே காதலையும் தூக்கிப் போட்டேன்
காரணம் காதல் கொண்டேன்
காதல் தோல்விக்காகவே
காதலித்தேன் அதனால் ஒருதலை காதலை
கதைகளை எழுதி அதில்
காதலில் வாழ்ந்தேன்
கதைக்குள்ளே வாழ்ந்தது என் சினிமா . . . . .

வறுமை
வறுமையின் கொடுமை
வயிற்றுக்கே தெரியும்
வாலிபன் எனினும்
வலிமை இழக்கிறேன் நாளும்
வலிகளில் தேயும் இதயம் வயதாகிபோக
வடிக்கிறேன் கண்ணீர்
வந்திடு கண்ணே
வரமாக நீயும்
வாலியை போல்
வாழ்ந்திட ஆசை
வலக்கரம் கொண்டு எழுதினேன் கவியை
வரைந்தது போல வளைந்தது தமிழும்
வாழ்த்திட யாருமில்லை நான் ரொம்ப பாவம்
வா என்று அழைப்பேன் குழந்தையாய் நானும்
வானவில் நீயும் வரமாறுத்தால்
வனமாகும் என் வாழ்க்கையும்
வாழ்ந்திட வேண்டும் வளர்ந்திட வேண்டும்
வானத்திலிருந்து இறங்கிடு
வண்ணத்தேன் மழை நீயும்
வறண்ட என் நெஞ்சை
வளமாகிடு என் இனிய வெள்ளித்திரையே

ஏமாற்றம்
ஏற்காது நெஞ்சம்
ஏமாற்றம் என்றும்
எழுதினேன் இரத்தத்தில்
ஏக்கங்கள் யாவும்
ஏழை என் ஆசையும்
எரிகிறது நாளும்
எண்ணத்தில் வண்ணம்
என்றென்றும் நெஞ்சத்தில் மஞ்சம்
ஏலரைப்போல ஏறுது என்னில்
எத்தனை துன்பம்
எத்திசை இன்பம்
ஏற்புடைய வழி ஒன்றை கண்டு
எளிமை என நெருங்க
எதிரானது காலம்
எதிர்பார்ப்பு மட்டும்
எஞ்சியது நெஞ்சில்
என்று உன்னை அடைவேன் அன்பு சினிமாவே . . . . .

தோல்வி
தோல்விகள் தொடருது நாளும்
தொடர்கதை போல
தொடுக்குது நெஞ்சினில் அம்பை
தோழர்கள் வந்து அறுதல் சொன்னால்
தொலைந்தது மீண்டும் கிடைக்குது
தோழிகள் வந்து அறுதல் தந்தால்
தோல்வியை மீண்டும் விரும்புது நெஞ்சம்
தோளிலே கனவை நான் சுமந்தேன்
தொல்லைகள் வந்து பாரத்தை கூட்ட
தோய்ந்தது நெஞ்சம்
தொடங்கிய பாவம்
தொடருவேன் நாளும்
தொலைவிலே நிலவு
தொட்டுத்தான் பார்க்க
தொலைகிறேன் கனவில்
தோல்விகள் கண்ட அனுபவம்
தோல்வியை வெற்றியாக்க
தொழிலென கொண்டு
தொழுதிட ஆசை
தொழில்துறை என் கனவு தொழில்துறை நீயே . . . . .


...............................
நானும் என் கனவும்
...............................

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (25-Feb-16, 2:12 pm)
பார்வை : 494

மேலே