தந்தையர் தின வாழ்த்து
என் தாய் மொழியின் வாயிலாக, என் தந்தைக்கு இது சமர்ப்பனம்..
உயிருக்கு வித்திட்டவன், உதிரத்தை தந்திட்டவன்,
கருவுற்றாத ஈசன் இவன், என்னை கற்ப்பித்த முதல் ஆசான் இவன்.
இவன் தியாகத்தை மதிப்பிட எது இனையானது?
ஒரு ஆயுலின் சேவை, அது மிகையாகாது.
இவன் கோவமும், கருனையும் இயல்பானது,
அரவனைக்கும் தன்மை, அது மறபானது.
இவன் கண்டதும் கொண்டதும் என்ன?
உறக்கம் இல்லாத இறவுகள் எத்தனை,
புத்தாடை அணியாத பன்டிகை எத்தனை.
சளைக்காமல் உழைத்தான் எப்பொழுதும்,
உன்னாமல் களைத்தான் பல பொழுதும்.
துன்பத்தை உல்மறைத்து, இன்பத்தை காட்டும் கன்னாடி.
நல் ஒழுக்கமும் பன்பும் உறைக்கும், எங்களுக்கு இவன் முன்னோடி.
இவன் தோள்களில் உட்கார்ந்து, நான் கண்ட உலகம்,
இமயத்தை காட்டினும், ஒரு ஜான் அதிகம்.
இவன் கைகளைப் பிடித்து நான் சென்ற பாதை,
என் வெற்றிக்கு வழிவகுத்த கண்ணனின் கீதை.
உன் மகனாகப் பெருமிதம் கொண்டேன், இந்த ஒரு ஜன்மத்தில்.
என் பிள்ளையாக நீ பிறந்து வா, மற்றொரு ஜன்மத்தில்.
என் நினைவுகளில், உன் வாசம் படரும்,
உன் சுவடுகளில் என் பயனம் தொடரும்.....