திருஷ்டி பொட்டுக்கள்

வளர்ந்த பிள்ளைதான் நீ
இருந்தாலும் வைத்துக்கொள்
இரு கன்னங்களிலும் திருஷ்டி பொட்டு
ஆமாம்
நானே கண் போட்டுக் கொண்டிருக்கிறேன்
உனை பார்க்கும் வேளைகளில்...
.
அமாவாசை இரவை அரைத்து குழைத்து
மயிலிறகு தூரிகையால் தொட்டெடுத்து
பெண்ணே நீ பிறக்கும் போதே
பிரம்மனவன் வைத்து விட்டான்
நெற்றி விட்டு கன்னம் தொட்டு
திருஷ்டி பொட்டாய் சிறு மச்சமொன்றை..

கருப்பு வண்ணத்தில் மட்டுமல்ல
கலர் கலராய் வைத்துக் கொள்கிறாய்
உனக்கு நீயே திருஷ்டி பொட்டுக்களை
ஆமாம் பெண்ணே
உன்னை விழுங்கிய நிலைக் கண்ணாடியில்
உன் நெற்றிப் பொட்டை
ஒட்டிச் செல்லும் வேளைகளில்...

எழுதியவர் : மணி அமரன் (25-Feb-16, 11:40 pm)
Tanglish : thrushti pottukkal
பார்வை : 163

மேலே