பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் - தமிழர் திருநாள் போட்டி கவிதை
-------- ஆதியுகம் முதலாய்
-------- மாதம் மும்மாரி கொடை யென
-------- பெய்திட்ட பெரு மழை
-------- மரங்கள் மறைந்திட்ட
-------- அவசர யுகத்தில் மறந்தே போனது
****
-------- மழையும் தற்போது மறைந்ததால்
-------- ஏரியும், குளமும், குட்டைகளும்
-------- இயந்திர மாந்தர்களின் வாழ்விடங்களாகின
****
-------- நாட்கள் நெடிய வெகுண்டு
-------- பொழிந்த மழை மக்களின் வாழ்வியலை
-------- அசைத்து அசை போட்டது
****
-------- உணவும் உடையும் இன்றி
-------- உடைந்த இதயங்கள் எண்ணிலடங்கா
-------- உதவி யென ஆதரவு கைகள் குவிய
-------- புழுதி குழைய மழையோடிய வீதியெங்கும்
-------- நேசமும் பாசமும் இழையோடியது
***
-------- பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்
-------- நாளும் தொடரு மென கருதி
-------- மழையில் பூத்தது மனித நேயமென்று
-------- பார் நெகிழ கொட்டட்டும் புகழ் முரசு….
பாரதி.செ
குறிப்பு:-
***********
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கு எழுதி அனுப்பிய கவிதை....