கனவாய் கலைந்த காதல் 12

பாடசாலை வந்தாள் பூவழகி .....
பூவரசனுக்கு தர்ம சங்கடம் .....
வினோத்தின் நெருக்குதல் ....
மறுபக்கம் பூவழகன் காதல் .....
இன்று முடிவு எடுப்போம் .....
மனதுக்குள் முடிவடுத்தான் ....!!!

பூவழகா உன்னோடு ....
ஒன்று பேசணும் என்றபடி ....
வந்தாள் பூவழகி ......
அந்தநேரம் வினோத்தும் ....
வந்தான் - பூவழகி - பூவா ....
உன்னால் தான் முடியும் ....
எனக்கு ஒரு கிக்கல் அதை ....
நீதான் தீர்க்கணும் என்று ....
பிரச்னையை சொன்னாள் ....!!!

என்
வகுப்பில் ஆகாஸ் .....
புத்தகங்கள் எல்லாவற்ரையும் .....
எனக்கு தெரியாமல் எடுத்து ....
என் பெயரையும் தன் பெயரையும் ....
எழுதி வைசுறிகிறான்....
அம்மா பார்த்தா... பாடசாலைக்கே .....
அனுப்பமாட்டாங்க ...
பாடசாலை முடிந்தவுடன்
என் பின்னாடியே வீடுவரை ....
வருகிறான் ......!!!

எனக்கு
காதல் பிடிக்காது பூவா .....
எனக்கு அப்பா இல்லை ....
அம்மா சாதாரண ஆசிரியை ....
மாமா உதவியுடன் வாழ்கிறோம் ....
மாமா மகனுக்கு என்னை ....
சின்ன வயதிலிருந்து பேசி ....
வைச்சிருகிறாங்க .....
இப்படி பல பிரச்சனையில் ....
நான் படிக்கும்போது ஆகாஸ் ....
ஒருபுறம் பிரச்சனை தாரான் ....!!!!

பூவழகியின் வாழ்க்கை....
வினோத்துக்கும் பூவனுக்கும் ....
ஒரு முடிவை எடுத்து சொல்லிடு ....
பூவழகி காதலிக்க மாட்டாள் .....
ஓகேடா மச்சி நான் போகிறேன்....
என்று சொல்லிக்கொண்டு ...
விடை பெற்றான் வினோத் .....!!!


^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 12
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Mar-16, 3:50 pm)
பார்வை : 517

மேலே