சோதித்துப் பார்க்கட்டும் துன்ப மில்லை - வஞ்சி விருத்தம்
நான்என்னை விநியோ கிக்கிறேன்;
ஆமாம்! மலிவாக பேரமின்றி
யாரேனும் விரும்பினால் என்னையே
இலவசமாய் விலையின்றி அளிக்கிறேன்! 1
ஆனால், பாருங்கள்! யாரும்
அவர்களுடன் என்னை எடுத்துச்
செல்ல விரும்பவில்லை என்றால்
நான்கவிதை எழுதுகிறேன் என்பதே! 2
என்னை எடுத்துச் செல்வது
அவர்களுக்குப் பார மாகலாம்;
நான்பயனற் றவனென்றும் நானெழுதும்
கவிதைகள் குப்பைக் கூடைக்கே.. 3
பொருத்தம் என்றும் நினைக்கலாம்!
எப்படி யானாலும், நானும்
அப்படித்தான் தொடர்வே னென்றும்
அவர்களிடம் சொன்னேன்! அதையும்… 4
கவனமாகக் கேட்டு சரியென்று
சொன்னால், ‘சரிசரி’ அவர்கள்
இந்த மனிதனை சோதித்துப்
பார்க்கட்டும்! துன்ப மில்லை! 5
ஆதாரம்: Poem by Gajanan Mishra ‘I want to distribute myself’