தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-21
பல்லவி
ECR-ல... கூத்தியாரு வச்சிருக்கும் குஸ்த்தி வாத்தியாருக்கு...
VOLUNTARY- யா.. வாக்கப்படப்போகும் ஒஸ்த்தி நாத்தனாரே....!
நீ மூணாம் தாரமா கழுத்த நீட்டி நாஸ்த்தி- யாகப்போறீயா...?
இது முட்டாள்த்தனமா உனக்கு ஜாஸ்த்தியாகத் தெரியலயா...?
உனக்காக கால்கடுக்க காத்துகிடக்கான் என் தம்பிக்காரன்!
உன்கிட்ட வரதட்சணை வாங்கமாட்டா என் ஆத்தாக்காரி..!
(பல்லவி)
காதல் என்னும் முத்து; யார் அப்பன் வீட்டு சொத்து ?
அதற்கே அடிமையானால் அப்புறம் பிடிக்கும் பித்து !
வயிறு உணவுக் கொள்ளாது; மனது ஒரு நிலையில் நில்லாது...
இரவும் பகலும் உயிரை வாங்கும்; கண்கள் தூக்கமின்றி ஏங்கும்..
அடியே நான் சொல்லுவது ஒருவன் ஒருத்திக் காதலில்
அடிப்பாவி நி சிக்கப்போவது இடியாப்பச் சிக்கலில்...!
பலமுறை நீ யோசி; வேணாம் அந்த பரதேசி !
வயிற்றில் லோடு ஏற்றி; பறந்திடுவான் வேரொருத்தியை தேடி..!
அப்புறம் உன் கதி என்ன ? நிர்கதி தானே..!
நீதி மன்றமும்; மாதர் சங்கமும் உனக்கு துணை நின்றாலும்
உனக்கு பிறக்கும் பிள்ளைகள் நாளைக்கு பழிகள் சுமக்கும்!
(பல்லவி)
ரெண்டு பொண்டாட்டி வாழ்க்கை நடத்தும்
குடும்பஸ்த்தனை பிரச்சனைகள் உலுக்கும்
அக்னி நட்சத்திரம் படம் பாரு..;
அதன் அர்த்தம் உனக்கு விளங்கும்!
தப்பு செய்ததற்கு தண்டணையாய்
தண்ணீரில் தத்தளிக்கும் தட்டாணாய்
உன் வாழ்க்கை ஆனதற்கு காரணம்
உன் அறியாமை என்னும் தோரணம் !
எடுக்கும் முடிவை நன்றாக எடு
ஏமாந்தப் பிறகு சும்மாய் இரு
மூளை இருப்பது யோசிக்கத்தான் – அதை
மூலையில் எறிந்தால் மனக் குழப்பம்தான்!
அப்புறம் உன் கதி என்ன ? நிர்கதி தானே..!
நீதி மன்றமும்; மாதர் சங்கமும் உனக்கு துணை நின்றாலும்
உனக்கு பிறக்கும் பிள்ளைகள் நாளைக்கு பழிகள் சுமக்கும்!
(பல்லவி)