கடைசிக் கொடை
மலரின் முகத்தை மரணிக்க விட்டு
கனியின் சுவையை மறந்திட செய்து
நிழலின் கழுத்தில் கத்தியை வைத்து
மரத்தின் கிளையை முறித்திடும் மனிதன்
இறங்கிவந்து களைப்பைப் போக்க
தண்ணீர்த் தேடித் தவித்து நிற்க
மிஞ்சி நிற்கும் மொட்டைமரமோ
தன் கடைசிக் கொடையாய் அவனுடைய
சவப்பெட்டிக்கு பலகைக் கொடுத்து மறையும்.
*மெய்யன் நடராஜ்